கடும் குளிரால் 220 குழந்தைகள் உயிரிழப்பு!
27 Jan,2024
பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக 200க்கும் மேற்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் வரலாறு காணாத கடும் குளிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் கடந்த 3 வாரத்தில் 200க்கும் அதிகமான குழந்தைகள் கடும் குளிரால் உயிரிழந்துள்ளனர். கடும் குளிர் காரணமாக நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் நிமோனியா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
அத்துடன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின்றி அவதியுற்று வந்ததாகவும் பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக பள்ளிகளில் காலையில் இறை வணக்கத்திற்கு தடை விதித்து அம்மாகாண அரசு தடை விதித்துள்ளது.
மேலும் ஜனவரி 31ம் திகதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாகாணத்தில் ஜனவரி 1ம் திகதி 10,520 பேருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.