ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமியின் முதல் அலைகள் தாக்க தொடங்கியது
01 Jan,2024
ஜப்பான்: சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில் சுனாமி ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் தாக்கி வருகிறது
அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா எச்சரிக்கை
ஜப்பான்: ஜப்பான் மக்கள் மேலும் பல பேரிடர்களுக்கு தயாராக இருக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்