சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 134ஆக உயர்வு!
21 Dec,2023
சீனாவின் கன்சு மற்றும் குயிங்காய் நகரங்களில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடந்துள்ளனர். கடுமையான பனிப்பொழிவால் மீட்பு பணிகள் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு சீனாவில் மலை பிராந்தியத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள்,கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து 32 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள் உணரப்பட்டது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன. மின்விநியோகம் மற்றும் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் உள்கட்டமைப்புக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 1,50,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். உயிரிழப்பு 134ஆக அதிகரித்துள்ளது. மேலும் கன்சு மற்றும் குயிங்காய் நகரங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மொத்தம் 7000க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுளளது.