ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு : 4 ஆயிரம் பேர் வெளியேற்றம்
19 Dec,2023
ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்த எரிமலை நேற்று(18) இரவு வெடிக்கத் தொடங்கியதுடன் தீப்பிழம்பை வெளிவிட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
4 ஆயிரம் பேர் வெளியேற்றம்
குறித்த தீப்பிழம்பானது செம்மஞ்சள் நிறத்தில் வெளியேறி வரும் நிலையில், எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை எரிமலை வெடிப்பதற்கு முன்பாக குறித்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரெய்க்ஜாவிக் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.