காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பணயக் கைதிகள் 3 பேர் உயிரிழப்பு
16 Dec,2023
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பணயக் கைதிகள் 3 பேர் உயிரிழந்தனர். தவறுதலாக நடந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 3 பணயக் கைதிகள் உயிரிழந்துள்ளனர். 3 பணயக் கைதிகள் உயிரிழந்தது தாங்க முடியாத சோகம் என்று இஸ்ரேல் பிரதமர் மெஞ்சமின் நெதன்யாகு வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இஸ்ரேலின் போர் இரண்டு மாதங்களை கடந்து மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது. இஸ்ரேலுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு அளித்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
காசா மீதான போரை நிறுத்துவதற்கான அட்டவணை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் ஹமாசை அழிப்பதற்கு பல மாதங்கள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக ஹமாஸ் குழுவை நசுக்கும் வரை ராணுவ தாக்குதலை தொடருவோம் என்று இஸ்ரேல் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.