எல்லாம் முடிந்துவிட்டது,ஹமாஸ் அமைப்பு சரணடையவேண்டும், இஸ்ரேல் பிரதமர் அழைப்பு!
12 Dec,2023
.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களாக ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு சரணடைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நெதன்யாகு, 'போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் ஹமாஸ் அமைப்பின் அழிவு துவங்கிவிட்டது. இது பாலஸ்தீன இஸ்லாமிய அமைப்புகளின் முடிவு. எல்லாம் முடிந்துவிட்டது, உங்கள் தலைவன் சின்வாருக்காக நீங்கள் உயிரை விட வேண்டாம். சரண்டைந்துவிடுங்கள்' எனத் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.
சில ஹமாஸ் தீவிரவாதிகள் சரணடைந்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் இராணுவம் அதற்கான எந்த சான்றையும் வெளியிடவில்லை. ஹமாஸ் அமைப்பு யாரும் சரண்டையவில்லை எனத் தெரிவித்துள்ளது.
.
இதுவரை 17,700-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட கோயில்களை தரைமட்டமாக்கியுள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. இவற்றுக்கு நடுவில், ஐநாவின் போர் நிறுத்தத்திற்கான எந்த முயற்சியும் வெற்றியைத் தரவில்லை.