இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு, 80 ஆயிரம் பேர் பாதிப்பு, 47 பேர் மரணம்
11 Dec,2023
.
இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பால் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
.
டெங்கு பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதையடுத்து, இலங்கையில் டெங்கு பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. டிசம்பரில் மட்டும் இதுவரை 3,704 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.
.
இலங்கையில் ஞாயிறு காலை நிலவரப்படி மொத்தம் 80,192 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதித்து 47 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேற்கு மாகாணத்தில் 46.4 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு மாகாணத்தில் 46.4 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்