புயல் வெள்ளத்தால் மூழ்கியது சென்னை; தத்தளிக்கும் மக்கள் - முழு தகவல்கள்

04 Dec,2023
 

 
 
மிக்ஜாம் புயல் நாளை (டிசம்பர் 5) முற்பகல் தெற்கு ஆந்திர மாநிலத்தின் கடற்கரையை, நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மிக்ஜாம் புயலின் அறிகுறிகள் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே தென்படத் தொடங்கிவிட்டன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கன மழை பெய்து வருகிறது. சென்னை மாநகரின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.
 
மிக்ஜாம் புயல் குறித்தும், சென்னை மழை குறித்த சமீபத்திய தகவல்களை சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
 
மிக்ஜாம் தீவிரப் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கில் சுமார் 100கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
 
கடந்த 6 மணிநேரத்தில் இது மணிக்கு 10கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. இது சென்னையிலிருந்து தொடர்ந்து வடதிசையில் நகர்ந்து செல்லக்கூடும்.
 
எனவே, பலத்த காற்றும் மழையும் அடுத்து வருகின்ற 6 மணிநேரத்தில் படிப்படியாக குறையத்துவங்கும்.
 
விமான சேவைகள் நிறுத்தம்:
 
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலும் மழைநீர் தேங்கியுள்ளதால், நாளை (செவ்வாய், டிசம்பர் 5-ஆம் தேதி) காலை 9:00 மணிவரை விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை விமான நிலையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
ஐந்து பேர் உயிரிழப்பு:
 
சென்னையில் பெய்துவரும் பெரும் மழையால், வெவ்வேறு சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகப் பெருநகர சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளனர். இதில் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், ஒருவர் மரம் விழுந்து உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள இருவரை அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
 
எப்போது, எங்கே கரையைக் கடக்கும்?
மிக்ஜாம் புயல் நாளை தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
 
பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறன.
 
புயல் உருவாகியுள்ள நிலையில், துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பாக்கம் துறைமுகங்களில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 
நவம்பர் 30-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 1-ஆம் தேதி காலை ஐந்தரை மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
 
மிக்ஜாம் புயல் நாளை தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
 
வட தமிழக மாவட்டங்களில் மிக்ஜாம் புயலின் காரணமாக நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
 
சென்னையில் சில இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ மழை வரை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 29 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
 
மேலும் நாளை புயலை கரையை கடக்கவுள்ள நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.
 
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நாளை(டிசம்பர் 05) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் குறித்து, சென்னை மண்டல வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் சமீபத்திய நிலவரங்களை பகிர்ந்துள்ளார்.
 
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் இன்று காலை நிலவரப்படி சென்னையிலிருந்து 110 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருந்தது.
 
தற்போது மிக்ஜாம் புயல் மேலும் வலுப்பெற்று, தீவிரப் புயலாக சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
 
மேலும் மிக்ஜாம் புயல், தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும்.
 
புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
 
இன்று இரவு வரை இந்த மாவட்டங்களில் மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையில் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிபிசி இந்தக் காணொளியை சரிபார்க்க இயவில்லை.
 
பெருங்களத்தூரில் முதலை வந்ததா?
சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையில் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிபிசி இந்தக் காணொளியை சரிபார்க்க இயவில்லை.
 
இது தொடர்பாக பதிவிட்டுள்ள தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, "இந்த வீடியோ குறித்து பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.சென்னையில் உள்ள பல நீர்நிலைகளில் சில குவளை முதலைகள் உள்ளன. இவை கூச்ச சுபாவமுள்ள விலங்குகள். மனித தொடர்பைத் தவிர்க்கின்றன. புயலின் தாக்கத்தில் பாரிய மழை காரணமாக நீர் பெருக்கெடுத்துள்ளதால், தயவு செய்து நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். இந்த விலங்குகளை தனியாக விட்டுவிட்டு, தூண்டப்படாமல் இருந்தால், மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை. பீதியடைய தேவையில்லை. வனவிலங்கு பிரிவு உஷார்படுத்தப்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
 
 
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் கனமழையினால், சென்னை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
 
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மற்றும் வருகை சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
மோசமான வானிலையின் காரணமாக 4ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
 
இதனால் வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் சிலர், விமான நிலையங்களில் முடங்கியுள்ளனர்.
 
சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், 150 விமான சேவைகள் வரை சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
 
சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானங்கள், தரையிறங்க ஏதுவான சூழல் இல்லாத நிலையில் பெங்களூரூவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
 
மிகவும் அவசியமான சூழலில் மட்டும் விமான பயணங்களை மேற்கொள்ளுமாறும், பிற பயணிகள் தங்களது பயணங்களை ரத்து செய்யுமாறும் சென்னை விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
 
கனமழை காரணமாக ஒரு சில ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 6 ரயில்கள், வியாசர்பாடி - பேசின் பிரிட்ஜ் ரயில் பாலத்தில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ரத்தாகியுள்ளன.
 
அதே போல சென்னைக்கு வர வேண்டிய 6 ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
அதே போல சென்னை புறநகர் ரயில் சேவையும் இன்று காலை 8 மணி வரை ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
 
கனமழையின் காரணமாக சென்னையின் ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் வழக்கம் போல இயக்கப்பட்டாலும், பரங்கிமலை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
 
 
 
'பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்' - வானிலை ஆய்வு மையம்
டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி, பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும், தமிழ் நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் அறிவுறுத்தியுள்ளனர்.
 
"புயல் கரையை கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்வரை பொது மக்கள் வெளியில் வராமல் இருக்க வேண்டும்," என வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்திருந்தார்.
 
மிக்ஜாம் புயலால் கனமழையுடன் 60-70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் அல்லது நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
 
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 4 ஆம் தேதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இந்தப் புயலின் காரணமாக, டிசம்பர் 3-ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
புயல் கரையைக் கடக்கும் டிசம்பர் 4-ஆம் தேதியன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
டிசம்பர் 4-ஆம் தேதியன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60கி.மீ முதல் 70கி.மீ வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் வீசும் எனக் கூறப்பட்டுள்ளது.
 
இது புயலாக உருமாறிய பிறகு இதற்கு, 'மிக்ஜாம்' எனப் பெயரிடப்பட உள்ளது. இந்தப் பெயர் மியான்மரால் வழங்கப்பட்டது.
 
இந்தப் புயலின் காரணமாக, வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மூன்றாம் தேதி காலை வரை 80கி.மீ. வேகத்திலும் அன்று மாலை வரை மணிக்கு 70 முதல் 80கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
 
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மூன்றாம் தேதி மாலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி மாலை முதல் மணிக்கு 80 முதல் 90கி.மீ வேகத்திலும் இடையிடையே 100 கி.மீ வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும்.
 
இதன் காரணமாக மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்களும் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
 
 
1. புயல் வரும் சமயத்தில் வெளியே, குறிப்பாக கடற்கரைப் பகுதிகளுக்கு, சென்று வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்
 
2. வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, சன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதை உடனடியாக சரி செய்துகொள்வது நல்லது.
 
3. காற்றின் அழுத்தத்தால் சன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஏதேனும் இருந்தால், சன்னலை அதை வைத்து மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும்.
 
4. சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் பழைய கட்டடங்களுக்கு உள்ளேயோ அருகிலோ இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 
5. பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.
 
6. பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களுக்கு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 
7. உங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தொண்டூழிய அமைப்புகளின் உதவி எண்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
 
8. மின்சாரம் இல்லாமல் போனால், தொலைக்காட்சி செய்திகளை எல்லோரும் பார்க்க முடியாது. செல்பேசியே தகவல்களை பெற வழியாக இருக்கும். பேட்டரியில் இயங்கும் பழைய டிரான்சிஸ்டர் இருந்தாலும் அது உதவியாக இருக்கும். அதனால் சமூக ஊடகங்களில் வரும் அனைத்து தகவல்களையும் நம்பி விடாமல், போலிச் செய்திகள் குறித்து கவனமாக இருங்கள்.
 
9. புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் வெளியே செல்ல நேர்ந்தால் கவனமாக இருக்கவும். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் கவனம் தேவை.
 
10. கனமழையும் புயலுடன் சேர்ந்து வரும். தாழ்வான பகுதிகளில் உங்கள் வீடு இருந்தால், விலைமதிப்புள்ள பொருட்களையும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பத்திரப்படுத்திவிட்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது நல்லது.
 
 
படகுகள், தண்ணீரில் இருக்கும் போது பயன்படுத்தப்படும் டியூப்கள், என மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் கமாண்டோ குழுக்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளன. இரவு நேரங்களில் வெள்ள நீர் சூழந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்களை மீட்புப் பணிகளை தொடங்குவார்கள்.
 
சென்னையில் மழை
தி.நகர் ,மேற்கு மாம்பலம் உள்ளிட்ட எந்தெந்த தண்ணீர் தேங்கியிருக்கிறதோ, அங்கு மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் முன்கூட்டியே சென்று தயாராக இருக்க, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
 
தி.நகர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்லக் கூடிய ரங்கராஜன் சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேற்றப்படுவது சவாலாக இருப்பதால், அங்கு கூடுதல் மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies