ஏடன் வளைகுடாவில் கப்பல் சிறைபிடிப்பு
27 Nov,2023
துபாய்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை இஸ்ரேல் கப்பல்கள் குறி வைத்து தாக்கப்படும் என ஈரானிலுள்ள காசா ஆதரவாளர்கள் கூறியதாக செய்தி வௌியானது. இந்நிலையில் இஸ்ரேலிய கோடீஸ்வரர் இயல் ஆர்ஃபர் என்பவருக்கு சொந்தமான சோடியாக் டேங்கர் கப்பல் பாஸ்பாரிக் அமில சரக்குகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.
இதில் இந்தியா, ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா நாடுகளை சேர்ந்த 22 பேர் பணியாற்றுகின்றனர். இந்த டேங்கர் கப்பல் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அதை சிறைபிடித்துள்ளனர். கப்பலை சிறைபிடித்தவர்கள் பற்றிய விவரங்கள் வௌியாகவில்லை. நேற்று முன்தினம் இஸ்ரேலியருக்கு சொந்தமான கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.