உக்ரைன் தலைநகர் மீது திடீர் தாக்குதல்: ரேடார்களில் சிக்காத ரஷ்ய ஏவுகணைகள்
11 Nov,2023
.
இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை நடந்த இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 நாட்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எதிரி கியேவ் மீது மற்றொரு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது என்று கீவ் நகர இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஜி பாப்கோ தெரிவித்துள்ளார்.
.
அபாய ஒலி சமிக்சைகள்
மத்திய கீவில் இரண்டு பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இந்த தாக்குதலின் போது அபாய ஒலி சமிக்சைகள் ஒலிக்கவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
.
இதற்கு விளக்கமளித்த விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மிக வேகமாகப் பறக்கும், மேலும் அவை க்ரூஸ் ஏவுகணைகள் போன்று ரேடார்களில் தெரிவதில்லை' என கூறியுள்ளார்.
ரஷ்ய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைன் மேலும் மேற்கத்திய வான் பாதுகாப்பு அமைப்புகளை கீவில் நிலைநிறுத்தியுள்ளதாக அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.