ஆப்பிரிக்காவில் 773 பேர் படுகொலை: ஜன்ஜாவீத் தீவிரவாதிகள் அட்டூழியம்
07 Nov,2023
வடஆப்பிரிக்காவில் ‘ஜன்ஜாவீத்’ என்ற தீவிரவாத கும்பலால் 773 பேர் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க நாடான மேற்கு டார்ஃபூர் அடுத்த ஜெனினா பகுதியில் கிராமங்களுக்குள் புகுந்த ‘ஜன்ஜாவீத்’ என்ற தீவிரவாத கும்பல், அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 773 மக்களை படுகொலை செய்தனர். நூற்றுக்கணக்கான மக்களை உயிருடன் எரித்தனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பியோட முயற்சித்தவர்களையும் துரத்திச் சென்று கொன்றனர்.
இஸ்ரேல் போருக்கு காரணமான ஹமாஸ் அமைப்பின் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளுக்கும் ஜன்ஜாவீத் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜன்ஜாவீத் தீவிரவாத அமைப்பு மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் செயல்பட்டு வருகின்றனர். டார்ஃபூர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த படுகொலை சம்பந்தமான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.