மக்கள் மீது இஸ்ரேல் . தாக்குதல், சிதறி கிடக்கும் சடலங்கள் அம்புலன்ஸ் மீது இஸ்ரேல்
03 Nov,2023
,
.
காசாவின் வடக்கு பகுதியிலிருந்து தமது உயிரை காப்பாற்றி கொள்ளும் நோக்குடன் தென்பகுதிக்கு தப்பிச் சென்ற மக்களின் கார் தொடரணிமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது. எனினும் பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச் செல்ல கடற்கரை பகுதி வீதியான ரஷீத்தை திறந்து வைத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.
இஸ்ரேல் படை தாக்குதல்
இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பை நம்பி இன்று வெள்ளிக்கிழமை மக்கள் தமது கார்களில் அந்த வழியாக சென்றவேளை அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
.
இதில் கார்களில் சென்ற அனைவரும் கொல்லப்பட்டதுடன் அவர்களின் சடலங்கள் வீதிகளில் சிதறி காணப்படுகின்றன.
அம்புலன்ஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழப்பு!
..
காசாவில் கடுமையான காயங்களிற்குள்ளானவர்களுடன் சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து, காசாவின் சுகாதார அமைச்சு மேலும் அறியத்தருகையில்,
.
“அம்புலன்ஸில் கடுமையான காயங்களுக்குள்ளான 15 முதல் 20 நோயாளிகள் காணப்பட்டனர்.
.
காசாவிற்கு வெளியே சிகிச்சைக்காக அல்ஸிபா மருத்துவமனையிலிருந்து எகிப்திற்கு ரபா எல்லை வழியாக அவர்களை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
இதன்போதே இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளது.