32 பேரின் உயிரைப் பறித்த வாட்டர் ஹீட்டர்.இத்தாலி புயல் 10 பேர் பலி
03 Nov,2023
.
ஈரானில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.
ஈரானின் காஸ்பியன் கடல் பகுதியை ஒட்டி கிலான் மாகாணத்தில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வந்திருக்கிறது. இதையடுத்து, எதிர்பாராத விதமாக திடீரென இந்த மையத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்த தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள லாங்கிரவுடு நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மையத்தில் மேலாளர் பயன்படுத்திய ஹீட்டரில் இருந்து பற்றிய தீ, மளமளவென அந்த மையம் முழுவதும் பரவியது தெரியவந்தது. இந்த விபத்திற்கு காரணமான மேலாளர் மற்றும் மற்ற ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண கவர்னர் டஸ்னிம் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் போதையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் 10 இடத்திற்குள் இருப்பதாக, ஐநாவின் போதை மற்றும் குற்ற அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஓபியம் கடத்தப்படும் முக்கிய வழித்தடமாக ஈரான் உள்ளது.
இத்தாலி புயல் 10 பேர் பலி
.
மிலன்: இத்தாலியை தாக்கிய சியாரன் புய லினால் வரலாறு காணாத அளவாக 200 மிமீ மழை பெய்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மாயமாகியுள்ளனர்.