சிரியாவில் அமெரிக்கா குண்டுவீச்சு
28 Oct,2023
வாஷிங்டன்: சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து கடந்த 10 நாட்களில் டிரோன்கள், ராக்கெட்டுகள் மூலம் 19 தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவலர் படை என்ற அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் அறிவித்தது. அவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் நேற்று, இரண்டு எப்-16 ரக அமெரிக்க ஜெட் போர் விமானங்கள் சிரியாவின் ‘பவுகமால்’ பகுதியில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.