கப்பல்கள் மோதி பயங்கர விபத்து.15 பேர் மாயம்.. தேடும் பணி தீவிரம்!
24 Oct,2023
ஜெர்மனி கடல் பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று மற்றொரு கப்பலுடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 15 பேர் மாயமாகிள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரம்மாண்ட சரக்கு கப்பலான வெரிட்டி, ஜெர்மனியின் பிரைமின் துறைமுகத்திலிருந்து இங்கிலாந்தின் இனிங்ஹாம் துறைமுகத்தை நோக்கி கிளம்பியது. இதேபோல் பஹாமாஸ் நாட்டைச் சேர்ந்த பொலிஸி என்ற சரக்கு கப்பலும் ஜெர்மனியில் இருந்து கிளம்பியது.
ஹெல்கோலாண்ட் தீவில் இருந்து சுமார் 15 நாட்டிகல் மேல் தொலைவில் இரு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த சேதம் அடைந்த வெரிட்டி கப்பல் கடலில் மூழ்கியது.
22 பேருடன் சிக்கிக்கொண்ட பொலிஸி கப்பல் கடலில் மூழ்காத போதும் கடுமையாக சேதமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் உட்பட மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெரிட்டி கப்பலில் இருந்து ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 15 பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே சவுத்ஹாம்ப்டன் நகரில் இருந்து ரோட்டர்டேம் நோக்கி சென்று கொண்டிருந்த லோனா என்கிற பயணிகள் கப்பல் வெரிட்டி கப்பல் விபத்திற்குள்ளான இடத்தின் அருகே மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.