காசா மீது இஸ்ரேல் . குண்டுவீசித் தாக்கியதில் இதுவரை 3,785 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு.,!
20 Oct,2023
.
காசா: காசா மீது அக்.7ம் தேதி முதல் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் இதுவரை 3,785 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் தற்போது வரை நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ், ரஃபா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி வருகிறது.
பதிலுக்கு ஹமாஸ் இயக்கத்தினரும் குண்டுகளை வீசி வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து ஏராளமான ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டதால் ஏராளமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பலரையும் மீட்க முடியாத நிலை நீடிக்கிறது.
.
காசாவில் இதுவரை 3,785 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு:
காசா மீது அக்.7ம் தேதி முதல் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் இதுவரை 3,785 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் போர் விமானங்களின் குண்டுவீச்சில் பலியான 3,785 பேரில் 1500க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று காசா தெரிவித்துள்ளது. அக்.7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்கியதில் 1400 இஸ்ரேலியர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல் குண்டுவீச்சில் பழமையான மசூதி நாசமானது:
இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் காசாவில் உள்ள பழமையான அல்ஒமாரி மசூதி நாசமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜபாலியாவில் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரமாண்டமான அல்லுமாரி மசூதி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிரேக்க பழமைவாத தேவாலயம் மீது குண்டுவீச்சு:
காசாவில் உள்ள கிரேக்க பழமைவாத கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கிரேக்க பழமைவாத கிறிஸ்துவ தேவாலயம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்கியதில் 8 பேர் இறந்ததாக காசா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.