ஆயுதம் ஏந்த தயாராகும் முன்னாள் கிளர்ச்சிக் குழு :அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்
27 Jan,2026
'பிரஜாசக்தி' (சமூக சக்தி) தேசிய வேலைத்திட்டத்தில் ஆட்களை சேர்த்து அரசுக்கு எதிரான செயற்பாடுகளை ஆரம்பித்து அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க அரசாங்கத்தில் இருக்கும் கட்சி ஒன்று திட்டமிட்டுள்ளதாக அர்ச்சுனா ராமநாதன் எம்.பி கூறியுள்ளார்.
இந்த செயற்பாடுகள் 2028-2029 ஆம் ஆண்டுகளில் மக்களுக்கு தெரியவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எங்களுக்கு தெரியாது இவர்களின் திட்டம் என்னவென்று.ஆனால் மக்கள் இவர்களை வெறுக்கும் போது 88-89 ஆம் ஆண்டுகள் போல் ஆயுதம் தூக்குவார்கள்.நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால் 2027-2028இல் அதை நாங்கள் பார்ப்போம்.
நாடாளுமன்றத்தில் 159 உறுப்பினர்களில் 2029 இல் ஜே.வி.பியில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இருக்க மாட்டார்கள்.இவர்களின் இந்த செயற்றிடங்களால் இது கட்டாயம் நடக்கும்.
மக்கள் அரசாங்கத்தை வெளியேற்றும் போது இவர்கள் மக்களுக்கு எதிராக கட்டாயம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவது நிச்சயமாகும். அவையின் உள்ளும் வெளியிலும் இவர்களின் நடத்தைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.