மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது; 4 படகுகள் கைப்பற்றல்!
13 Jan,2026
இலங்கை கடற்படை கடந்த 06ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நாட்டின் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளின் மூலம், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், உரிமங்கள் இல்லாமல் சுழியோடுதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு டிங்கி படகுகளுடன் 13 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அதன்படி, திருகோணமலை குச்சவெளி, மன்னார் நரிவிலகுளம், புத்தளம் காயக்குளி மற்றும் காலி ரத்கம ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு;ள்ளனர்.
வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் புல்மோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படை, மன்னார் மற்றும் நானாட்டான் மீன்வள ஆய்வு அலுவலகங்கள் மற்றும் காலி கடலோர காவல்படையிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.