நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு!
22 Dec,2025
இன்று 22ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் நுகேகொடை சந்திக்கும் கொஹுவல சந்திக்கும் இடையிலான வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயது இளைஞர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மற்றும் கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.