களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் : வெள்ளத்தில் மூழ்கவுள்ள கொழும்பின் சில பகுதிகள் !
29 Nov,2025
களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால், பாரிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதன் படி, மாலம்பே – கடுவல பிரதான வீதிக்கிடையே உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போதைய காலநிலை காரணமாக மேல் பகுதியிலான மழைப்பொழிவுகள் அதிகரித்து வருவதால், நீர்மட்ட உயர்வு மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், அதிகாரிகள் வெளியிடும் மேலதிக அறிவுறுத்தல்களை கவனத்துடன் பின்பற்றவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.