முல்லைத்தீவு இராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு – வீரர் காயம்
25 Nov,2025
முல்லைத்தீவு, கொக்காவில் 4 இல் உள்ள இராணுவ ஆயுதப் புலனாய்வுப் படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு இராணுவ வீரர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இராணுவ வீரர் தெஹியத்தகண்டியாவைச் சேர்ந்த 36 வயதுடைய இராணுவ வீரர் ஆவார்.
இராணுவ வீரர் தன்னிடம் இருந்த T-56 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொள்ள முயன்றாரா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.