அம்பிட்டிய தேரரை கைது செய்ய உத்தரவு
25 Nov,2025
அம்பிட்டிய சுமணரத்ன தேரரை (Ampitiye Sumanarathana Thero) கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ICCPR சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2023/10/23 அன்று சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தனுக ரணஞ்சக தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
“வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்“ என்று மட்டக்களப்பில் உள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கூறியது தொடர்பாக, குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.