தேசபந்து தென்னக்கோன் குற்றவாளி - உறுதி செய்தது விசாரணை ஆணைக்குழு
22 Jul,2025
பொலிஸ்மா அதிபர் பதவிக்கான அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மை என கண்டறியப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை பாராளுமன்ற விசாரணை குழுவில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து சுமார் ஒருமாதகாலமாக, பாராளுமன்ற விசாரணை குழுவின் முன்னிலையில் 10 தடவைகள் சாட்சியமளித்தார்.
2023.12.31 ஆம் திகதி மாத்தறை வெலிகம டபிள்யூ 15 ஹோட்டல் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலும் இக்குழு தீவிர விசாரணைகளை மேற்கொண்டது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 30 சாட்சியாளர்கள் பாராளுமன்ற விசாரணைகுழுவில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
ஜூலை மாதம் 10 ஆம் திகதியிலிருந்து இந்த பாராளுமன்ற விசாரணை குழுவினால் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.