செவ்வந்தியை பிடிக்க ஒரு மில்லியன் ரூபா பணம்
26 Feb,2025
கணேமுல்ல சஞ்ஜீவவின் (Ganemulla Sanjeeva) கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்பவரின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
23 வயதான குறித்த யுவதி மத்துகம பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைதாகியுள்ளார்.
இந்நிலையில், குறித்த யுவதியின் கையடக்க தொலைப்பேசியைப் பரிசோதனை செய்வதற்காக நீதிமன்றத்திடம் உத்தரவைப் பெற்று அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
க் குற்றவாளியான கனேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த உதவிய இஷார செவ்வந்தியை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் புத்திக மனதுங்க முடிவு செய்துள்ளார்.
சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தப்பிச் செல்வதைத் தடுக்க பொலிஸ் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டும், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தியும் கடல் வழிகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் செவ்வந்தியை தேடி வருகிறது. எனினும் இதுவரை பொலிஸாரின் கண்ணில் படாமல் தப்பி வருகிறார்.
சமகாலத்தில் பொலிஸாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படும் பெண்ணாக மாறியுள்ள செவ்வந்தியை பிடிக்க மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.