தமிழர்கள் மியான்மரில் சைபர் கிரைம் முகாம்களில் இருந்து மீட்பு !அனுரா
                  
                     17 Feb,2025
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	அனுராவின் பிரத்தியேக முயற்ச்சி காரணமாக,  மியான்மரில் சைபர் கிரைம் முகாம்களில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் அடங்குகிறார்கள்.
	 
	மீட்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்களும் இரண்டு இளம் பெண்களும் அடங்குவர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும்.  மேலும் தாய் எல்லைப்பகுதியிலிருந்து பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு மாற்றப்படுவார்கள். அவர்களின் தாயகம் திரும்பலுக்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் செய்யப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. .
	 
	 
	இதற்கிடையில், மேலும் நான்கு இலங்கையர்கள் மியான்மரில் உள்ள தனித்தனி சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவில் விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
	 
	 
	வெளிநாட்டு அமைச்சர் விஜித்த ஹேரத் சமீபத்தில் தாய்லாந்து வெளிநாட்டு அமைச்சர் மற்றும் மியான்மரின் துணைப் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, இந்த சைபர் கிரைம் நடவடிக்கைகளில் சிக்கிய இலங்கையர்களை மீட்பதில் உதவி கோரினார். இந்த இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக, மொத்தம் 13 பேர் இப்போது மீட்கப்பட்டுள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.