தமிழ் இளைஞர்களை வெள்ளை வேனில் கடத்தி வெட்டிக் கொன்று முதலைக்கு போட்ட கோட்டா- ஆராயும் அனுரா அரசு !
21 Dec,2024
வெள்ளை வேனில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களை கொன்று, அவர்களை அங்கம் அங்கமாக வெட்டி, முதலைக்கு போட்ட சம்பவத்தை முன் நாள் அமைச்சர் கம்மம்பெல மீடியாக்களுக்கு நேரடியா அறிவித்துள்ளார். கோட்டபாய மற்றும் மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்ட நபர் ஒருவரே இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு தெரிவித்தார் என்று, முன் நாள் அமைச்சர் தடாலடியாக கூறியுள்ள நிலையில். இது தொடர்பாக உடனே ஆராயுமாறு அனுரா உத்தரவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
குறித்த பாதுகாப்பு அதிகாரியை கைது செய்வது, தொடர்பாக பொலிஸ் சி.ஐ.டி பிரிவினர் முனைப்புக் காட்டி வருவதோடு. இந்த வெள்ளை வேனில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை கைது செய்வதனால், இறுதியில் கோட்டபாய மற்றும் மகிந்த ஆகியோர் கைதாகும் நிலை தோன்றக் கூடும் என்று கொழும்புச் செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.