யோஷித்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு
17 Dec,2024
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவை விசாரணையொன்றுக்காக முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
மகிந்த ராஜபக்வின் இரண்டாம் புதல்வரும், கடற்படை அதிகாரியுமான யோஷித்த , மகிந்தவின் மெய்ப்பாதுகாவலரான ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நெவில் வன்னியாரச்சி ஆகியோருக்கு எதிராக பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில் நேற்றைய தினம் (16.12.2024) வாக்குமூலம் பெறுவதற்காக யோஷித்த மற்றும் நெவில் வன்னியாரச்சி ஆகியோருக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் இருவரும் அங்கு வர முடியாது என நேற்றையதினம் சட்டத்தரணிகள் மூலம் தெரிவித்தனர்.
யோஷித ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் நெவல் வன்னியாராச்சி தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை கையகப்படுத்தியமை தொடர்பான விசாரணை தொடர்பில் இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.