இந்து - லங்கா ஒத்துழைப்பினை ஸ்திரப்படுத்தி வலுப்படுத்துவதற்கான கூட்டு அறிவிப்பு வரவேற்கத்தக்கது - ரணில்
17 Dec,2024
இந்து - லங்கா ஒத்துழைப்பினை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கூட்டு அறிவிப்பை வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று எட்கா ஒப்பந்தத்துடன் முன்னோக்கி செல்வதற்கான தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை (17) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரால் திங்களன்று புதுடில்லியில் அறிவிக்கப்பட்ட கூட்டு அறிவிப்பில் இந்து - லங்கா ஒத்துழைப்பினை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
அதேபோன்று பிராந்திய வலுசக்தி மற்றும் தொழிற்துறை மையமாக திருகோணமலையை அபிவிருத்தி செய்து பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு (எட்கா) ஒப்பந்தத்துடன் முன்னோக்கி செல்வது தொடர்பான தீர்மானத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.