இலங்கையில் 50 அடி பள்ளத்தில் விழுந்த வேன்! ஒருவர் உயிரிழப்பு! 7 வைத்தியசாலையில்
15 Dec,2024
மாத்தளை, ரிவஸ்டன் - லக்கல வீதியில் பயணித்த வேன் ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வேனில் 8 பேர் இருந்ததாகவும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றவர்கள் காயமடைந்த நிலையில் லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.