நபர் ஒருவரை இழுத்துச் சென்ற முதலை
29 Nov,2024
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட Crocodile Rock பகுதியில் நபர் ஒருவர் முதலையால் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
நேற்று மாலை Crocodile Rock பகுதியில் உள்ள துவா ஆற்றில் இருந்து எருமை மாடுகளை அழைத்து சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரை முதலை ஒன்று பிடித்து இழுத்து சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பசரிச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.