பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆடைகளைக் கழற்றி சித்திரவதை செய்த பொலிஸ் கான்ஸ்டபிள்
30 Oct,2024
சேவையில் புதிதாக இணைந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆடைகளைக் கழற்றிவிட்டு சித்திரவதை செய்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
திஸ்ஸமஹாராமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் கடந்த 24 ஆம் திகதி அன்று இரவு தங்களது பொலிஸ் விடுதியில் தங்கியிருந்த போது அங்குச் சென்ற சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரினதும் ஆடைகளைக் கழற்றிவிட்டு அவர்களை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.