இலங்கைக்கு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு
01 Oct,2024
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட உத்தியோகபூர்வ குழுவொன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி புதன்கிழமை முதல் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குறித்த குழு வருகை தரவுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய குழு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார வேலைத்திட்டம் குறித்தும் அங்கு கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.