மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இரத்து
30 Sep,2024
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி .
அனுரா வந்ததும் உணவு விலைகள் குறைக்க பட்டு இருக்காம்.
ஒன்று, வல்வெட்டித்துறையில் இயங்கிக் கொண்டு உள்ளது.
இந்த முறை ஊருக்கு போயிருந்த போது நான் கவனித்த ஒரு விடயம், அந்த நாட்களில் மதுபானக்கடை இருந்த இடத்தில் ஒரு தேத்தண்ணிக் கடை தான் இருந்தது. எப்படியும் ஒன்றாவது இங்கு இருக்காமல் இருக்காதே என்று நினைத்தனான். ஆனால் என் கண்ணில் ஒன்றும் அகப்படவில்லை. பக்கத்து ஊர்களில் எங்கும் இருக்கின்றதோ தெரியவில்லை............
வடக்கில் எத்தனை உண்டு” ???
கிழக்கில் எத்தனை உண்டு???
கந்தையா அண்ணை, இந்த தகவல்கள் எல்லாம் ஒரு வாட்ஸ்அப் பதிவாக இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கின்றது. உண்மை பொய் தெரியாது. இங்கே முதலில் யாராவது இதை இணைத்தார்களா என்றும் தெரியவில்லை.
கிளிநொச்சியில் சந்திரகுமாரும் அங்கயனும் டக்ளசும் சாராயக்கடை வைத்திருக்கிறார்கள். இதை யாரும் கதைக்க தயார் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் உரிமையாளர் யார் என்று யாரும் அறிந்துகொள்ளலாம்.
சந்திரகுமாரின் மனைவியின் பெயரில் கரடிப்போக்கு சந்தியில் இரண்டு பார்கள் உள்ளன.
பரந்தனில் இருக்கும் இரண்டு பார்கள் அங்கயனின் தம்பியின் பெயரில் இருக்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ளது.
கனகபுரம் வீதியில் உள்ளது தான் கிளிநொச்சியில் அதிகவிலைக்கு விற்கப்பட்ட பாராம். இது டக்ளசின் தம்பி தயானந்தாவின் பெயரில் உள்ளது.
பூநகரி சந்தியில் உள்ள ஒன்று Rockland சாராய நிறுவனத்தின் பெயரில் உள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு பக்கத்தில் உள்ள பார் புலம்பெயர் வாழ் பிரபல தமிழ் வர்த்தகர் பெயரில் உள்ளது. அதுவும் ஒரு சாராய நிறுவனத்தின் பெயரில் தான் பதிவு உள்ளது.
6.5 லட்சம் மக்கள் உள்ள யாழில் 67 பார்கள் உள்ளன. 2 லட்சம் மக்கள் உள்ள கிளிநொச்சியில் 6 பார்கள் உள்ளன. 2.5 லட்சம் மக்கள் உள்ள வவுனியாவில் 39 பார்கள் உள்ளனவாம். 1.8 லட்சம் மக்கள் உள்ள முல்லைத்தீவில் 11 பார்கள் உள்ளனவாம்.