ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
22 Sep,2024
நாட்டில் நேற்று இரவு 10 மணிமுதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று மதியம் 12 மணி வரையில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று(22) காலையுடன் தளர்த்திக் கொள்ளப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு இல்லையெனில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது பற்றி அரச மேல்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் காலை ஆறுமணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டு, அதன் பின்னர் தேவையேற்படின் இன்று(22) மாலை தொடக்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
இன்று மாலை ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டால் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நடைபெறும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.