ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரவை கைது செய்யுமாறு முறைப்பாடு
12 Sep,2024
தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் தலைவருமான அநுர குமார திஸாநாயக்கவை கைது செய்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அநுர திஸாநாயக்க இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்களால் இன முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன குறிப்பிட்டுள்ளார்.