இலங்கை 2022ம் ஆண்டின் மிகமோசமான நாட்டை முடக்கிய பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதலாவது தேர்தலை எதிர்கொள்ள தயாராகும்வேளையில் ராஜபக்ச குடும்பம் அதன் அரசியல் வாரிசினை அறிவித்துள்ளது.
பல அரசியல் ஆய்வாளர்கள் இதனை அந்த குடும்பத்தின் அரசியல் மறுபிரவேச முயற்சியாக கருதுகின்றனர்.
இந்த வாரம் ராஜபக்சாக்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யுத்தகால தலைவர் மகிந்த ராஜபக்சவின் 38 வயது மகன் நாமல் ராஜபக்சவை செப்டம்பர் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பாளராக அறிவித்தது.
2022 போராட்டக்காரர்கள் கோரிய இளம் தலைவர் என அவரது தந்தையால் வர்ணிக்கப்பட்ட நாமல் ராஜபக்சவிற்கு மிகவும் கடினமான ஒரு பணி காத்திருக்கின்றது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
பிரிவினைவாத விடுதலைப்புலிகளுடனான மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இந்த குடும்பம் முன்னணிக்கு வந்தது – பிரபலமானது.
2009 இல் இலங்கை இராணுவத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் யுத்தவீரர்கள் என அழைக்கப்பட்டனர் குறிப்பாக இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தினால்.
இரண்டு தசாப்தங்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்திய பின்னர் இந்த பரம்பரை நாட்டின் பொருளாதார நெருக்கடியால் உருவான பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து தனது வீழ்ச்சியை சந்தித்தது.
2022 மே மாதம் மூன்றாவது தடவையாக பிரதமராக பதவிவகித்த காலப்பகுதியில் மகிந்த ராஜபக்ச தனது பதவியை துறந்துவிட்டு இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள கடற்படை தளத்திற்கு தப்பியோடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
தாங்க முடியாத வாழ்க்கை செலவு அத்தியாவசிய பொருட்களிற்கான தட்டுப்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து அவரது சகோதரர் நாட்டிலிருந்து தப்பியோடி பின்னர் இரண்டு மாதங்களின் பின்னர் பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
அந்த நெருக்கடி காரணமாக விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சராக பதவிவகித்த நாமல் ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச கட்டிடங்களிற்குள் நுழைந்தனர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை ஆக்கிரமித்தனர், ஜனாதிபதி பிரதமரினது இல்லங்களையும் ஆக்கிரமித்தனர், அவர்கள் ஜனாதிபதியின் நீச்சல் தடாகத்தில் நீந்தினர், அவரது கட்டிலில் உறங்கினர் அவரது பியானோவை இசைத்தனர்.
2023 இல் வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய இலங்கையின் உயர்நீதிமன்றம், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களே காரணம் என தெரிவித்தது.
தற்போது நாமல் ராஜபக்ச தனது முதலாவது ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கின்றார், இலங்கையின் அரசியலின் முன்னரங்குகளிற்கு திரும்புவது குறித்த ஆசையை ராஜபக்ச பரம்பரை கொண்டுள்ளது என்கின்றனர் பல ஆய்வாளர்கள்.
நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அவர்களிற்கு அரசியல் எதிர்காலம் உள்ளதை வெளிப்படுத்துகின்றது என்கின்றார் கொழும்பை தளமாக கொண்ட மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து.
எனினும் 2024 ஜனாதிபதி தேர்தலை விட அடுத்த ஜனாதிபதி தேர்தலே நாமல்ராஜபக்சவின் இலக்கு என்கின்றார் அவர்.
ஒரு ராஜபக்ச வேட்பாளர் போட்டியிடவில்லை என்றால் , அவர்களின் முழு பாரம்பரியம் மற்றும் வம்சத்தை உருவாக்கும் முயற்சிகள் முழுமையாக தோல்வியடையும் என்கின்றார் பாக்கியசோதி சரவணமுத்து.
2024 ஜனாதிபதி தேர்தலில் தன்னால் சிறப்பாக செயற்படமுடியும், தனது குடும்பத்திற்கு இன்னமும் ஆதரவுள்ளது என்பதை காண்பிப்பதற்காக நாமல் ராஜபக்ச ஒரு கடினமான சவாலை எதிர்கொள்கின்றார் என பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிடுகின்றார்.
ராஜபக்ச ஆட்சியை வீழ்த்திய ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான மெலானி குணதிலக இலங்கையர்கள் இந்த பரம்பரைக்கு எதிராக தொடர்ந்தும் போராடவேண்டும் என அழைப்பு விடுக்கின்றார்.
ஆர்ப்பாட்டங்களின் போது தாங்கள் எதற்காக போராடினார்கள் என்பதை இலங்கையர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன், என தெரிவிக்கும் அவர் இந்த முறையும் அவர்கள் ராஜபக்சாக்களை தோற்கடிப்பார்கள் இந்த முறை மாத்திரமல்ல எதிர்காலத்திலும் தோற்கடிப்பார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.
ராஜபக்சாக்கள் தங்கள் வலுவை காண்பிக்க முயல்கின்றனர், தங்களிற்கு என்ன வாய்ப்புகள் உள்ளது என பார்க்க விரும்புகின்றனர் என்கின்றார் அவர்.
மகிந்த ராஜபக்ச நாமல் ராஜபக்சவிற்கு அவர்களது பரம்பரைக்கு ஆதரவு வழங்கும் இலங்கையர் குழுவொன்று காணப்படுகின்ற அதேவேளை அவர்கள் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பார்களா என்பது உறுதியாக தெரியவில்லை என்கின்றார் பாக்கியசோதி சரவணமுத்து.
இளைய ராஜபக்சவிடம் அவரது தந்தையின் கவர்ச்சி இல்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
நாமல் ராஜபக்சவின் அரசியல் திறமையும் கட்சியின் மீள எழும் திறனும் கடுமையாக சோதிக்கப்படும் என்கின்றார் சிங்கப்பூர் பல்கலைககழகத்தை சேர்ந்த அரசியல் விஞ்ஞானி ராஜ்னி கமகே.
இலங்கையர்களை கவர்வதற்காக 78 வயதான மகிந்த ராஜபக்சவை அவரது பரம்பரையை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதே அவரது வயதை கருத்தில் கொள்ளும்போது மிகவும் முக்கியமான பலவீனம் எனவும் அவ தெரிவிக்கின்றார்.
ராஜபக்ச வம்சாவளியின் அரசியல் எதிர்காலத்திற்காக கட்சியில் உள்ள முக்கிய குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கீழ் மட்டத்திலிருந்து மீண்டும் கட்சியை கட்டியெழுப்பவேண்டும் என்கின்றார் அவர்.