ராஜபக்ச குடும்பத்திலிருந்து வெளியானது தகவல்
30 Jun,2024
எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு(ranil wickremesinghe) ஆதரவு அளிக்குமாறு பொதுஜன பெரமுனவிற்கு இந்தியா(india) அழுத்தம் கொடுத்து வருவதாக ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளராக கருதப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவின் நிலைப்பாடு
தம்மால் இயக்கக் கூடிய நபர் ஒருவர் இலங்கையில் அதிபராக இருக்கவேண்டுமென இந்தியா கருதுகிறது.எனவே பொதுவேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்க ஆதரவு வழங்குமாறு பசில் ராஜபக்சவிற்கு(basil rajapaksa) அந்நாடு அழுத்தம் கொடுத்து வருகிறது.
டில்லியால் என்ன கூறப்பட்டாலும் அதனை பசில் கேட்பார்.ஆனால் பொருத்தமான நேரத்தில் உரிய முடிவுகளை அவர் எடுப்பார்.
பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவதற்கு இருந்த இறுதி வாய்ப்பையும் ரணில் தவறவிட்டுவிட்டார்.ராஜபக்சாக்களின் பொறுமை எல்லை தாண்டிவிட்டது.ரணிலை ஆதரித்தால் கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சியை ஆரம்பிப்பேன் என நாமல் ராஜபக்ச(namal rajapaksa) கூட கூறிவிட்டார்.
மொட்டு கட்சி வேட்பாளர் களமிறங்குவது உறுதி
எனவே அதிபர் தேர்தலில் மொட்டு கட்சி வேட்பாளர் களமிறங்குவது உறுதி.
சிலர் ரஜபக்சாக்கள் வேண்டாம் என்கின்றனர்.முதுகெலும்பிருந்தால் முடிந்தால் யானை சின்னத்தில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டு காட்டட்டும் என அவர் சவால் விடுத்தார்.