3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன், இலங்கை சிறுவனின் உலக சாதனை
30 Jun,2024
இலங்கையைச் (srilanka) சேர்ந்த 3 வயது சிறுவனொருவன் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
1098 உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடம் செய்து கூறியே சிறுவன் இந்த சாதனைப் படைத்துள்ளார்.
வத்தளை - ஹுனுபிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஷம்லான் என்ற சிறுவனே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இதன்மூலமாக, இந்த சிறுவன் 03 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட சிறுவன் என்ற பெயரை ஷம்லான் பெற்றுள்ளார்.
இதற்கமைய சோழன் உலக சாதனைப் படைத்த இந்த சிறுவனுக்கு சான்றிதழ், தங்கப் பதக்கம் மற்றும் அடையாள அட்டை போன்றவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.