நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது! அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்
28 Jun,2024
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று பாதாள உலக குழு தலைவர்கள் உட்பட 807 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுக்திய நடவடிக்கை
இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 773 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் பட்டியலில் இருந்த 34 சந்தேகநபர்கள் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் யுக்திய நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 52 கிலோ 616 மில்லி கிராம் ஹெரோயின், 142 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 453 மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.