நள்ளிரவில் யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து ; மூவர் பலி
26 Jun,2024
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
குறித்த விபத்தானது நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த யாழ்ப்பாண பேருந்து முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது பார ஊர்தி ஒன்று பேருந்தில் மோதி விபத்துள்ளாகியமை தெரியவந்துள்ளது.
குறித்த அதி சொகுசு பேருந்து திருத்த வேலை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருத்த பணியில் மூவர் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பேருந்து மீது பார ஊர்தி மோதியதில் மூவர் உயிரிழந்துடன் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் உள்ளன சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.