இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் , எந்த நாடுகள் முதலிடம் தெரியுமா..!
23 Jun,2024
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி, இந்த வருடத்தில் இதுவரை 966,604 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரை 69825 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்
ஜனவரியில் 208253 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் 218350 சுற்றுலாப் பயணிகளும் மார்ச் மாதத்தில் 209181 சுற்றுலாப் பயணிகளும் ஏப்ரலில் 148867 சுற்றுலாப் பயணிகளும் மே மாதத்தில் 112128 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
2023 இல் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பதினான்கு இலட்சத்து எண்பத்து ஏழாயிரத்து முன்னூற்று மூன்று ஆகும்.