ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக இலங்கையர்களை ஏமாற்றிய டிக்டொக் கும்பல்
21 Jun,2024
இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்பி ஏமாற்றிய டிக்டொக் கும்பல் இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் டிக்டொக் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை இலக்கு வைத்து இந்த மோசடி பாரியளவிலான முன்னெடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டுபாயில் இருந்து இவ்வாறு மோசடி இடம்பெறுவதாக இதுவரை மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய தெரியவந்துள்ளது.
போலந்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று டிக்டொக் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து இந்த மோசடியான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுவதுடன் அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் மத்திய கிழக்கு நாடுகளுககு பணியாளர்களாக சென்றுள்ளனர்.
அவ்வாறானவர்களை குறிவைத்து, ஐரோப்பிய நாடான போலந்தில் வேலை வழங்குவதாக டுபாய் நாட்டில் இருந்து டிக் டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு ஏமாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போலந்து செல்ல முயற்சித்தவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த மோசடி கும்பல் ஏமாற்றிவிடுவதாகவும் தொலைபேசிகளுக்கு பதிலளிப்பதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.