இலங்கை விமானப் போக்குவரத்து சபை கலைப்பு: புதிய உறுப்பினர்கள் நியமனம்
18 Jun,2024
அடுத்த 2024/25 ஆம் ஆண்டிற்கான இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் பணிப்பாளர் சபை கலைக்கப்பட்டு புதிய பணிப்பாளர் சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய தலைவராக நளின் சில்வாவும், புதிய செயலாளராக சசங்க விஜேரத்னவும், புதிய உப தலைவராக ரந்திக அனுரங்கவும், புதிய உதவிச் செயலாளராக சந்தருவன் அத்தநாயக்கவும், புதிய பொருளாளராக கயானி ஹபன்வீரவும், புதிய குழு உறுப்பினர்களாக அஞ்சுல சமரசேகரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமித குலதுங்க, பிரேசன மாலியத்த, சசங்க ஹிமால், இசுரு ஹார்த் மற்றும் பிரபாத் லோககே ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.