வாசனை திரவியதொழிற்சாலையில் இரசாயன கசிவு,30 பேர் மருத்துவமனையில்!
12 Jun,2024
பாணந்துறை, பின்வத்த - நல்லுருவ பிரதேச தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் கலவை தயாரிப்பில் ரசாயன பொருள் மாறியதால் இரசாயன கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ள நிலையில் இரசாயன கசிவின் பின்னர், தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.