இலங்கை பெண்ணுக்கு கண்டறியப்பட்ட கொடிய பக்டீரியா தொற்று
10 Jun,2024
அவுஸ்திரேலியாவில் (Australia) வசிக்கும் தனது மகளைப் பார்க்கச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பக்டீரியா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, புருலி அல்சர் (Buruli ulcer) என்ற தொற்றால் பாதிக்கப்பட்ட அவரின் தோலை அந்த நோயை உண்டாக்கும் பக்டீரியாக்கள் உண்ணுவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
74 வயதான அவர் தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
அதன் போது, திடீர் ஒன்று ஒருநாள் அவரது ஒரு கை வீங்கி நீல நிறமாக மாறியுள்ளது.
அதனையடுத்து, அவரது மகளால் பெனடோல் அருந்த கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தொற்றியுள்ள பக்டீரியாவை முதலில் மருத்துவர்களால் அடையாளம் காண முடியவில்லை என்றும், பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது கையை அகற்றிய பின்னர் பக்டீரியாவை கண்டறிந்துள்ளனர்.