இலங்கை வந்த இந்திய இளம் தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்
05 Jun,2024
கிரிந்த கடற்கரையில் குளித்த இந்திய தம்பதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இந்தியப் பிரஜைகளான 35 வயதுடைய ஆண் மற்றும் 33 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடற்கரையில் பலத்த அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரும் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினருடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்