சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு
03 Jun,2024
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐந்து பேர் காணமால் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக மழை பெய்ந்தமையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் பல பிரதேசங்களில் அழிவை ஏற்படுத்தியுள்ளது.