இலங்கையர்களுக்கு விசேட விசா சலுகை வழங்கும் தாய்லாந்து நாடு, வெளியான மகிழ்ச்சித் தகவல்
30 May,2024
இலங்கை (srilanka ) சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட விசா சலுகைகளை தாய்லாந்து (thailan) அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய விசா நடைமுறைக்கு தாய்லாந்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் கீழ் இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கு செல்ல முன்கூட்டியே விசா பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலாப் பயணிகள் 60 நாட்கள் வரையில் தாய்லாந்தில் விசா இன்றி தங்கியிருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஒன் அரைவல் விசா (One Arrival Visa), இலவச விசா என சில புதிய திட்டங்களின் அடிப்படையில் பல நாடுகளுக்கு விசா சலுகை வழங்கும் நடைமுறை இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைப் பிரஜைகள் ஒன் அரைவல் விசா (One Arrival Visa) மூலம் 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.