சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
21 May,2024
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேறியுள்ளதாக சிறி லங்கா இராணுவம்(sri lanka army) தெரிவித்துள்ளது.
சிறி லங்கா இராணுவத்திலிருந்து வெளியேறிய இராணுவத்தினர் சட்டரீதியாக விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்கான பொதுமன்னிப்பு காலம் நேற்றுடன் (20) முடிவடைந்தது.
சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகியதாக
இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 15,667 இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகியதாக சிறி லங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31, 2023 அன்று மற்றும் அதற்கு முன் விடுமுறை இல்லாமல் பணிக்கு வராத இராணுவ வீரர்களுக்கு இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, மேற்படி காலப்பகுதியில் விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காமல் தற்போது வெளிநாட்டில் இருக்கும் 373 இராணுவத்தினரை சட்டரீதியாக இராணுவ சேவையில் இருந்து விலகுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.