இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து,, 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி
19 May,2024
குறித்த விபத்தானது (18) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கேகாலை (Kegalle) - அவிசாவளை(Avissawella) வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கண்டியில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து அதிவேகமாக பயணித்து மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்